Sunday, November 7, 2021

திருவள்ளுவர் கிறித்தவரா?

திருவள்ளுவர் சமணர், புத்த மதம் சார்ந்தவர், எந்த மதத்தையும் சாராதவர் வரிசையில் அவர் கிறித்தவர். எத்தனை பொய் மற்றும் வன்மம். இதற்கு எல்லாம் பல அறிஞர்கள் அன்றே ஆராய்ந்து பதில் கூறினார்கள். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் இந்த புத்தகத்தில் இதை விரிவாக கூறியுள்ளார்.



  1. உலகத்தார் உண்டென்ப தில்லென்பான்; வையத்து அலகையா வைக்கப்படும். 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்ற தொல்காப்பிய வாக்கின் படி, உலகம் என்பது பரமஞானிகளைக் குறிக்கும். உத்தம ஞானிகள் உண்டு என்று உரைக்கும் பரம்பொருளை எவன் ஒருவன் இல்லையென்று புல்லறிவால் பகல்வானோ, அவனை பேய் என்று ஒதுக்கிவிடு என்கிறார் திருவள்ளுவர்.
  2. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் நாளை வணங்காத் தலை. இறைவனுடைய திருவடிகளை வணங்காத தலைகள் பயனுடயவையல்ல. காணாத கண் போலவும், கேளாத காது போலவும், வணங்காத தலை எண் உணர்க. எண்குணத்தான் - சிவ மூர்த்திக்கு உரிய தன்வயத்தனாதல், தூய உடம்பினாதல், இயற்கை யுணர்வினாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை. எட்டுவான் குணத்தீசன் எம்மான்றனை - அப்பர் இறைவனை மறையவனை எண்குணத்தினானை -சுந்தரர் எண்குண பஞ்சரனே - கந்தரநுபூதி தலையென ஒருமையில் கூறி, குணமிலது என்று ஒருமையில் கூறாமல், குணமில என்ற பன்மையில் கூறினதால் ஆன்மாக்கள் பல என்பதை உணர்த்தினார் என்று உணர்க. இதனால் திருவள்ளுவருக்கு ஆன்மாவை தவிர வேறு பொருள் இல்லை என்ற ஏகான்மவாதக் கொள்கை உடன்பாடென்று உணர்க.
  3. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு. பிறப்பிறப்பில் பல்லூழிக் காலமாக ஆன்மாக்கள் பட்டு உழல்கின்றன. ஆன்மாக்கள் இறந்து பிறக்கின்றன. இந்த உயிர்க்கும் ஒரு நிலைபேறான வீடு கிடைத்திலதோ? என்று கழிபேரிரக்கத்தால் கூறுகின்றார் திருவள்ளுவர்.
  4. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு இப்படி பல பிறவிகள் எடுத்து உயிர்கள் உழல்கின்றன என்று கூறும் சைவ சித்தாந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் திட்டவட்டமாகக் கூறுகின்றார்.
மறுபிறப்பையே ஒப்புக்கொள்ளா மதத்தினர்கள் திருக்குறளை எமக்கு சொந்தம் என்பது இமயத்தின் உச்சியை எமக்குச் சொந்தம் என்று கூறிய சிறுமகார் செயலை ஒக்கும்.

சைவ சமயத்திற்கே உரிய இரு வினை, மூம்மலம் ஆகிய கருத்துக்களை கொண்ட நூல் திருக்குறள்.
ஆகவே திருவள்ளுவர் சைவ இந்து சமயத்தவரே. உணர்ந்தால் நன்று, உணர்வீரோ மக்களே!!

No comments:

Post a Comment