Tuesday, November 23, 2021

நான் என்னும் அகங்காரம்

ஒரு ஊரில் ஒரு குரு வசித்து வந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு ஆன்மீக கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். அவருடைய சீடர்கள் எல்லோரும், ஒருவரை விட மற்றவர் அனைத்தும் கற்றவர்கள், என தலைக்கனம் நிறைந்தவர்களாக இருந்தனர்.

This image has an empty alt attribute; its file name is 20211123_2053128354020894675955857.jpg

குரு இவர்களின் தலைக்கனத்திற்கு பாடம் புகட்ட எண்ணினார். ஒரு நாள் அவர்களிடம், "உங்களில் யார் வைகுண்டம் செல்வார்கள்?" எனக் கேள்வி கேட்டார். உடனே ஒவ்வொருவரும் தான் அந்த தவறை செய்திருக்கிறேனே இந்த தவறை செய்திருக்கிறேனே, என நினைத்து எதுவும் பேசாமல் இருந்தார்கள்.

அதற்கு குரு, "உங்களில் ஒருவர் கூட வைகுண்டத்திற்கு செல்லப் போவதில்லையா?" எனக் கேட்டார். அனைவரும் மவுனமாக இருந்தனர். உடனே சீடர்களில் ஒருவன் குருவிடம், "நான் போனால் போகலாம்" என பதிலளித்தான்.

மற்றவர்கள் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தனர். அவனாலும் வைகுண்டம் செல்வேன் என்று உறுதியாக கூற முடியவில்லையே என மற்றவர்கள் அவனைக் கேலி செய்தனர்.

அதற்கு அந்த சீடன்," 'நான்' என்கிற அகந்தை போனால்தான், நாம் வைகுண்டம் செல்ல முடியும் என மிக தீர்க்கமாக பதிலளித்தான்.

குரு சீடர்களிடம்,"ஆம், 'நான்' என்னும் அகங்காரத்தை நீங்கள் மறக்கும் போது தான், மனிதப்பிறவியின் வெற்றி கிடைக்கும். அப்பொழுது தான் வைகுண்டம் செல்ல முடியும்" எனக் கூறினார்.

No comments:

Post a Comment