Thursday, November 11, 2021

கீழ்வெண்மணி போராளிகள்

திராவிடப் பண்ணையார்களை எதிர்த்து தேவேந்திரகுல வேளாளர்கள் போராடினார்கள். கம்யூனிஸ்ட்கள் உள்ளே புகுந்து கலகமாக ஆக்கினார்கள்.

கீழ்வெண்மணிப் படுகொலை நாளில் அத்தனை கம்யூனிஸ்ட்களும் ஓடித் தப்பித்திருக்க அப்பாவி தேவேந்திரகுல வேளாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கொலைவெறித் தாக்குதலை முன்னெடுத்த நாயுடுவுக்கு ஆதரவாக நின்ற ஈ.வெ.ரா, கம்யுனிஸ்ட்களின் அராஜகப் போராட்டங்களை விமர்சித்தார்.

அண்ணாத்துரையால் ஆரம்பிக்கப்பட்டு கருணாநிதியால் கைப்பற்றப்பட்ட திமுக அரசு, சொந்தமாகக் காரெல்லாம் வைத்திருக்கும் அந்தப் பண்ணையார்கள் கொலை செய்திருக்கமாட்டார்கள் என்று சொல்லி விடுதலை செய்தது.

அந்தப் பண்ணையாரைக் கொன்றால் எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடும் என்று ஒருவன் புறப்பட்டுச் சென்று வெட்டிக் கொன்றான்.

ஒரே ஒருவர் மட்டுமே உழவுத் தொழிலில் ஈடுபடும் மண்ணின் மைந்தர்களின் வேதனையைப் புரிந்துகொண்டிருந்தார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினர்

அரசிடம் சென்று கூலி விவசாயிகளின் பேரில் கடனுதவி கேட்டார். கிடைத்த பணத்தை வைத்து நீர் வளம் கொண்ட நிலங்களை வாங்கி அவர்களின் பெயரிலேயே பதிவு செய்தார். நாலைந்து வருடங்கள் அரும்பாடு பட்டு உழைத்து அந்தக் கூலி விவசாயிகள் கடனை அடைத்து நிலத்தைச் சொந்தமாக்கிக் கொண்டனர்.

அரைப்படி நெல் கூடுதலாகத் தரும்படி அடாவடியாகக் கேட்ட கம்யூனிஸம் அழிவைக் கொண்டுவந்தது.

கம்யூனிஸ்ட் கொடி ஏற்றியதால் திராவிடப் பண்ணையார்கள் ஆத்திரமுற்று அராஜகத்தை அவிழ்த்துவிட்டனர்.

காந்தியவாதத்துடன் கடனுதவியையும் கலந்து உழுபவருக்கே நிலத்தை ஒரு சில வருடங்களில் சொந்தமாக்கிக் காட்டினார்.

ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் அல்ல; ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலத்தை உழைப்பாளர்களுக்கு ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் கிடைக்க வழி செய்தார்.

கீழ்வெண்மணி படுகொலையைச் செய்த பண்ணையாரை ஒருவன், நீண்டகாலமாகத் திட்டமிட்டு, ஆற அமரக் கொல்வதற்கு முன்பே அத்தனை கூலி விவசாயிகளுக்கும் அந்த நிலமே சொந்தமாகிவிட்டிருந்தன.

இந்த சாதனையைச் செய்துகாட்டியவர்கள் கிருஷ்ணம்மாள் – ஜெகந்நாதன் தம்பதி.

இவர்களைப் போன்ற உண்மையான போராளிகளை மதித்துப் போற்றும் மத்திய பாஜக அரசுக்கு மனப்பூர்வமான நன்றிகள். இந்த ஆண்டு அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

பதிவு :  B. R. Mahadevan

No comments:

Post a Comment