Thursday, December 31, 2020

ஜனவரி 1 புத்தாண்டு? அப்படியா?

ஜனவரி 1 புத்தாண்டு?

ஆனால் யாருக்கு!!


வீரத்தமிழ் மன்னன் பாஞ்சாலசிங்கம் "வீரபாண்டிய கட்ட பொம்மனைத்" தூக்கில் போட்டுக் கொன்ற "ஆங்கிலேய வெள்ளைக்கார்களுக்கு ஜனவரி 1 புத்தாண்டு வாழ்த்துக்கள்"

அஞ்சாநெஞ்சன் பெருவணிகன் "கப்பலேட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரை" செக்கு இழுக்க வைத்து கொடுமை படுத்திய "வெள்ளைகார ஆங்கிலேய கொடுங்கோலனுக்கு ஜனவரி1 புத்தாண்டு வாழ்த்துக்கள்" 

விடுதலை வேங்கை "தீரன் சின்னமலையை" தூக்கில் போட்டு கொன்ற "வெள்ளைக்கார ஆங்கிலேய வெறியர்களுக்கு ஜனவரி 1 புத்தாண்டு"

தன் உயிரை துச்சம் நினைத்து உயிர் நீக்குவரை நம் இந்திய தேசிய கொடியை உயர்த்தி பிடித்த. "திருப்பூர் கொடிக்காத்த  குமரனை" லத்தியால் அடித்தே கொன்ற "வெள்ளைகார ஆங்கிலேயனுக்கு ஜனவரி1 புத்தாண்டு வாழ்த்துக்கள்." 

கோயில்ப்பட்டி வீர லட்சுமி போன்ற  நம் நாட்டு விடுதலைக்கு போராடிய நம் குல அன்னையர்களின் துணியை உருவி  மானபங்கப் படுத்தி மகிழ்ந்தார்களே "ஆங்கிலேய வெள்ளைகார வெறிப் பிடித்தவர்களுக்கு ஜனவரி 1 புத்தாண்டு வாழ்த்துக்கள்"

"சிவகங்கை சீமை மன்னன் மாவீரன் பெரியமருதை" விழ்த்த காளையர் சிவன் கோயில் கோபுரத்தை இடிப்பதாக  ஆங்கிலேயர் கூறி நரிதந்தரம் செய்து  கைது செய்த பெரிய மருதுவின் கடைசி  ஆசையை காளையார் சிவன் கோயின் எதிரே புதைக்க வேண்டும் என்பது. ஆனால் பெரிய மருதுவை திருப்பதுரில் தூக்கிலிட்டு கொன்றப்பின்னரும் "உடல் வேறு தலை வேறாக வெட்டி. உடலை திருப்பத்துரிலும், தலையை காளையர் சிவன் கோயில் கோபுரத்தின் எதிரிலும் புதைத்த, இரக்கமற்ற கொலைகார கொடூரர்கள் வெள்ளைகார ஆங்கிலேயர் ஜனவரி1 புத்தாண்டு வாழ்த்துக்கள்."

 நம் நாட்டின் இயற்க்கை  வளங்களையும், நம் முன்னேர்கள் சேர்த்து வைத்திருந்த அரிய விலைமதிப்பற்ற கோகிணூர் வைரம் போன்ற அணைத்து பொருள்களையும்  கப்பல் கப்பலாக 400 ஆண்டுகளாக ஏமற்றி கொள்ளையடித்து சென்ற "ஆங்கிலேய வெள்ளையர்களுக்கு ஜனவரி1 புத்தாண்டு வாழ்த்துக்கள்."

நம் நட்டு மன்னர்களை குறுக்கு வழியில் ஏமாற்றி கொன்றுவிட்டு. 
நம்மை சுந்திரத்திற்கு முன் கொத்தடிமையாக வைத்திருந்த காலத்தில் கற்ப்பிணி பெண்கள், முதியவர்கள், விதவைகள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் காக்காய் குருவியை போல் சுட்டுதள்ளி" நேர்வழியில் போர் புரியாமல் நரிதந்திரம் பயன் படுத்தி கொடுமைபடுத்திய ஆண்மையற்ற "வெள்ளைகார ஆங்கிலேயர்களுக்கு ஜனவரி 1 புத்தாண்டு வாழ்த்துக்கள்."

கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே, தமிழன் வாளோடு தோன்றிய மூத்தக்குடி தமிழனுக்கு என்றும்  "புத்தாண்டு சித்திரை 1" தான். 

தமிழ் மொழியில் 3000 வருடங்களுக்கு முன் தொல்காப்பியரால் தொல்காப்பியம்  இலக்கண நூல் எழுதப்பட்டது என்று அறிவியல் அறிஞர்கள் கூறும் போது. அதற்கு முன் அகத்தியர் எழுதிய இலக்கண நூல் அகத்தியம் உள்ளது. தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் ஆவார்.

உலகில் மிக மிக பழமையும் தொன்மையும் வாய்ந்தது தமிழ் மொழி என்று ஆராய்ச்சியளர்கள் கூறும் போது. கேவலம் 2000 வருடம் கூட ஆகாத ஆங்கிலேயரின் ஜனவரி 1 வருடப்பிறப்பை  ஏற்றுக்கொள்வானா? எந்த தமிழனும் ஏற்று கொள்ளமாட்டான்.

ஆனால் அனைவருக்கும் வாழ்த்து சொல்லும் பரந்த மனபான்மை தமிழனுக்கு மட்டும் தான் உண்டு. ஆதலால் ஜனவரி1 ஆங்கிலேயர் புத்தாண்டு வாழ்த்துக்கள்.