Monday, March 11, 2013

என் காதலி

என் சிறு வயதிலிருந்தே என் காதலியை எனக்கு தெரியும். அப்போதெல்லாம் அவளை எனக்கு பிடிக்காது, ஏனென்றால் அவள் காரணமாக என் அப்பாவிடம் நிறைய திட்டும், கொட்டும் வாங்கியிருக்கிறேன். நான் துன்பப்படுவதைக் கண்டும் அவள் சிரித்துக் கொண்டிருப்பாள்.

ஆரம்பத்தில் எனக்கு அவளை பிடிக்கவில்லை என்றாலும் அவள் என்னை விடவில்லை. காதல் விசித்திரமானது, அது யாரிடம் எப்போது வரும் என்று  தெரியாது. அவளிடம் எனக்குண்டானக் காதல் நாளொரு கொட்டும், பொழுதொரு திட்டுமாக வளர்ந்து வந்தது. நிதம் காலை அவளைக் காணாமல் விடிந்ததில்லை.

பெற்றோர் பார்த்து செய்த, திருமணத்திற்குப் பின் ஏற்படும் காதல் போன்றது, அவளிடம் எனக்குண்டான காதல். அவளை அதிகம் படிக்கப் படிக்க அவள் மெல்ல மெல்ல என் இதயத்தில் வாடகைக் கூடத் தராமல் குடியேறிவிட்டாள்.
இன்று வரை வாடகை வாங்க முடியவில்லை.. ரொம்ப பீடிகை போடாதே சீக்கிரம் சொல்லு யார் அந்த பொன்னு என்று நீங்க கேக்கரது புரியுது. அந்த பொன்னு யார்னா... தமிழ் தான்.

சத்தியமா நம்ம தமிழ் மொழியை தாங்க சொல்றேன். சின்ன வயசுல நா எப்படி தமிழ் கத்துகிட்டேன் என்பதே ரொம்ப சுவாரசியமான தகவல் (ஆமா இவர் தமிழ் கத்துகிட்டது பெரிய சரித்திரம்!!! அத பதிவு வேற செய்றான்)

தினசரி காலைல ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு 6.30 க்கு என் அப்பா கூட்டிட்டு போவார். அன்னிக்கு காலைல வந்த தினத்தந்தி எனக்காகவே, நா தப்புத் தப்பா படிக்கவே, அயர்ன் செஞ்சு வச்ச மாதிரி மடிப்புக் கலையாம காத்துக்கிட்றுக்கும்.
நானும், " உன் பேர் என்ன ?" எனும் கேள்விக்கு "நான் நாலாவது படிக்கிறேன்" னு சொல்லும் தெளிவோடு போவேன். அந்த "தினத்தந்தி" அப்டீன்ற அந்த வார்த்த எனக்கு வரவே வராது. அத சொல்றதுக்கு நா பட்ட கஷ்டம் இருக்கே,

"தினத்தந்தியும் நான் தினம் வாங்கிய கொட்டுகளும்" னு ஒரு புக்கே போடலாம்.
ஆனால் அதை ஒரு போட்டியா எடுத்து நல்லா தமிழ் படிக்கக் கத்துக்கிட்டேன். என் அப்பா தான் என்னோட முதல் குரு. தமிழ் மேல் என்னோட காதல், பல முறை தோற்று அதன் பின் கடைசியாகக் கிடைத்த வெற்றி போன்றது.

அதனால் தமிழ் என் மனதில் நீங்காத இடம் பெற்றது. அவள் தான் என் காதலி, என்றும் அழியாத இளமையுடன் இருக்கும் காதலி...

Sunday, March 10, 2013

சிவராத்திரி

அனைவருக்கும் இனிய மகா சிவராத்திரி வாழ்த்துகள்...

Thursday, March 7, 2013

Practice your anger


Axe effect:

The discussions in the media, about violence against women have increased tremendously. But the question is whether these Medias are doing their work responsibly? 

I am highly disturbed, by the advertisement that is being telecast ed very often in TV’s. I am convinced to use the ad as the topic for this post. The purpose of the advertisement is to market the perfume. But how they are doing it, is my concern.

Scenario in the ad –In a restaurant, a boyfriend is waiting for his girl to come. She will be nearing him and in the middle another man will cross her. Here comes the twist, within a second she forgets him and goes behind the man who came in the middle, because he would have used that perfume. I cannot explain any other ad’s, which are for products meant for men. They are portraying women in same manner or even worse than this.

The concept behind this ad is, to attract a girl; a man just needs this perfume. Even the girl will be attracted as such and there is no place for any noble qualities. Nobody can portray women in such a bad manner.

In the same manner there are movies, songs and print media making money from this cheap tactics. And making the people to think in the manner they are projecting women. In the essence, media is directly or indirectly supports these kind activities and showing them as just an object.

What kind of opposition has shown by the media’s against these kinds of atrocities?

Answer: None.

The reason is Money, how will they sacrifice their esteemed clients just for a moral value?

We have to teach noble values such as discipline, affection, respecting women to the children. Otherwise, a child growing in this environment would never respect a woman, even as a human being. Already we have a large population of such people with us.

To show our opposition; we have to boycott the products, which are being marketed using this cheap ad’s. It is the easiest and powerful way to oppose. This is also a “Sathyagraha”, a much needed one at this time.

சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே.
                                                                            -- மகாகவி பாரதியார்

Note :
I am not good in English, please forgive me if you find mistake in the language. If there are errors, let me know via comments or an e-mail. I will correct it.

Practice your anger is the literal translation of Rowthiram pazhagu.

Wednesday, March 6, 2013

நிமிர்ந்து நில் - 2

பாரதிய மருத்துவம்:

சென்ற பதிவின் முடிவில் கேட்ட கேள்வி - சுஸ்ருதர் யார் ?

1. முதல் அறுவை சிகிச்சை நிபுணர்.
2. முதல்  பிளாஸ்டிக் சர்ஜன் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை) நிபுணர்
3. முதல் கண் அறுவை சிகிச்சை நிபுணர்.

மேலே கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் சுஸ்ருதர்.


சுஸ்ருதர்:


இவர் வாழ்ந்த காலகட்டம் கி.மு 6ம் நூற்றாண்டு, இன்று மருத்துவத்தின் தந்தை என கூறப்பெறும் ஹிப்போக்ரடஸிற்கு (Hippocrates) 150 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலகட்டத்திற்கு, நம்மால் சற்றும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல்வேறு அறிவியல் சாதனைகளை மருத்துவ உலகில் செய்துள்ளார்.

இவர் உடற்கூறியல், நோய் அறிவியல், கருவியல், செரிமானம், வளர்சிதை மாற்றம், மரபியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்தார். இன்றைய கங்கை கரை நகரமான பனாரசில் வாழ்ந்து தன்னுடைய கலையை வளர்த்து வந்தார். கூர்மையான கவனிக்கும் திறத்தினால் பல கண்டுபிடிப்புகளை மருத்துவ உலகிற்கு அளித்துள்ளார்.

Diagnosis எனும் நோயறிதலில் பல்வேறு யுக்திகளை கூறியுள்ளார், நோயாளியின் சிறுநீர் மூலம், அது தேன் போல இனிப்பாக இருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதை கூறினார். அதனால் மதுமேகம் என்று அழைத்தனர் (மது - தேன், மேகம் - நோய்).


சுஸ்ருத சம்ஹிதை :

சுஸ்ருதர் தான் கண்டுப்பிடித்த, பயன்படுத்திய, தான் பயிற்சி செய்தவற்றை முழுமையாக ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார், அதுவே சுஸ்ருத சம்ஹிதை. 

இது இரண்டு பகுதியாக உள்ளது. 
1. பூர்வ தந்த்ரம் 
2. உத்தர தந்த்ரம் 

இதில் மருந்து பயன்பாடு, குழந்தை மருத்துவம், முதியோர்கள் பற்றிய மருத்துவ துறை, காது, மூக்கு, தொண்டை மற்றும் கண், நச்சுயியலின் நோய்கள் மற்றும் உளவியல் நடைமுறைகளை விவரிக்கின்றார். 

அறுவை சிகிச்சை குறித்து அவர் கூறும் கருத்துகள் இன்றைய மருத்துவ புத்தகங்களுக்கு சற்றும் குறையாதவை. அவர் கூறும் முறைகள் :

  1. சேதனா : வெட்டி நீக்குதல் - பழுதடைந்த உறுப்பை முழுவதுமாக எடுத்துவிடுவது.(ஏதாவது உடல் உறுப்பு (கை, கால்) சரி செய்யமுடியாதபடி பாதிக்கப்பட்டால் செய்வது) பின் செயற்கை கால்கள் பொருத்துவது. (ஆம், செயற்கை கால்கள் அப்போதே இருந்தன)
  2. பேதனா : கீறி அறுத்தல் - உள்ளுறுப்புகளில் தேவையற்ற பொருட்கள் (Foreign bodies) வெளியேற்றுவது.
  3. லேகனா: தேவையற்ற சதையை நீக்குதல். (அல்சர் கட்டி போன்றவை)
  4. வ்யாதனா : துளையிடுதல் -  சிரைகளின் (veins) வீக்கம்,  விரை வீக்கம், வயிறு பகுதிகளில் உள்ள தேவையற்ற திரவம் (ascitic fluid), போன்ற நோய்களை சரி செய்ய அங்கே துளையிட்டு வெளியற்றுவது.
  5. ஈசனா : உட்செலுத்துதல் - sinuses போன்றவற்றுக்கு.
  6. ஷ்ராவனா : கேட்ட ரத்தத்தை வெளியேற்றுவது.(தோல் நோய்கள், வீக்கம்)
  7. ஸ்வானா : தையல் - விபத்தாலோ, மருத்துவ தேவைக்காகவோ ஏற்ப்பட்ட காயங்களை தைப்பது.
மேலும் இதில் 120 அறுவை சிகிச்சை உபகரணங்கள், 300 அறுவை சிகிச்சை வழிமுறைகள், 600 விதமான மருந்துகள் - அவைகளை மூலிகை, வேதி பொருட்கள் மூலம் செய்யும் முறைகள், காயங்கள், வயது முதிர்ந்த மற்றும் மன நோய் தொடர்பான நோய்கள் உட்பட 1120 மருத்துவ நிலைமைகளை, பட்டியலிடப்பட்டுள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி:

       
இவரின் பிளாஸ்டிக் சர்ஜரிக்கான பல நுட்பங்கள் இன்றளவும் மாற்றமில்லாமல் இருக்கிறது. மூக்கு மறு பொறுத்து சிகிச்சை (Nose transplantation) இவருடையே அதே முறை தான் அப்படியே பயன்படுத்தப் படுகிறது. இதனால் இவரை மேற்குலகம் இன்று பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என்று கூறுகிறது. 

தம்முடைய மாணவர்களுக்கு சுரைக்காய், வெள்ளரிக்காய், இறைச்சி, தோல், தாமரைத்தண்டு மூலம் அறுவை சிகிச்சை செய்ய கற்றுக்கொடுத்தார். உடற்கூறு பற்றி அறிய இறந்த உடல்களை பயன்படுத்தி எடுத்துரைத்தார்.

இன்றைக்கு மருத்துவ மானவர்கள் எடுத்து கொள்ளூம் உறுதி பிரமாணம் போலவே இவருடைய சீடர்களும் உறுதி பிரமாணம் எடுத்துள்ளனர். அந்த உறுதி மொழி கீழே :

"மனிதநேயத்துக்குக் களங்கம் விளைக்கும் காமம், கோபம், குரோதம், கர்வம், பேராசை, பொறாமை, அறியாமை, முரட்டுத்தனம், கபடம் போன்ற குணங்களைக் கைவிட்டு ... துறவியைப் போலத் தனித்திருந்து சத்தியம், சுயகட்டுப்பாடு, ஆகியவற்றை மேற்கொண்டு ... ஆதரவற்றோர், தூரதேசத்தவர் அனைவருக்கும் மருத்துவ உதவியளிப்பேன் என்று குருவின் சொற்படி கீழ்ப்படிந்து உறுதி கூறுகிறேன்"


இவரை போல பலர் நம் நாட்டில் இருந்துள்ளனர். சரகர், மாதவர்,  நாகார்ஜுனர் போன்ற பல புகழ்பெற்ற மருத்துவர்கள் இன்று நம் தலைமுறைக்கு தெரிவதில்லை.

சுஷ்ருத சம்ஹிதை மற்றும் சரக சம்ஹிதா இரண்டும் 8 ஆம் நூற்றாண்டில் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாரசீகம் வழியாக போர்சுகல், கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு சென்றது.








மேலதிக விவரங்களுக்கு :


சுஸ்ருத சம்ஹிதை விக்கிபீடியா
Home of Ayurveda
வலைப்பூ
Infinity foundation link
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/9476614
http://www.ispub.com/journal/the-internet-journal-of-plastic-surgery/volume-4-number-2/sushruta-the-first-plastic-surgeon-in-600-b-c.html
http://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/Sushruta.html
http://www.clinicolymp.com/www.gesaps/web.gesaps.com.en/Sushruta.htm


Tuesday, March 5, 2013

ரௌத்திரம் பழகு

ஏக்ஸ் விளைவு (Axe effect):

பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி ஊடகங்களில் தற்போது அதிகமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஊடகங்கள் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்கின்றனவா? என்பது தான் என் கேள்வி. 

ஒரு விளம்பரம் சில நாட்களாக என் மனதை கரையானாக அரித்துக்  கொண்டிருக்கிறது. ஆம் அந்த விளம்பரம் தான் இந்த பதிவின் தலைப்பாக உள்ளது. அதுவும் நாம் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே காட்டப்படுகிறது. அந்த விளம்பரத்தின் நோக்கம் அந்த குறிப்பிட்ட வாசனை திரவியத்தை  சந்தைப்படுத்துவது (மார்க்கெட்டிங்). ஆனால் அதை எப்படி செய்கிறார்கள் என்பதில் தான் என்னுடைய கோபம் இருக்கிறது.

அதில் வரும் ஒரு காட்சி, ஒரு காதலன் தன் காதலிக்காக ஒரு உணவகத்தில் காத்திருப்பார், அந்த பெண் தூரத்தில் வரும் போதே இவரை பார்க்க வந்து கொண்டிருப்பார், நடுவே மற்றொரு ஆண் அவரை கடந்து போவார் உடனே அந்த பெண் தான் காண வந்த நண்பரை விடுத்து அவரைப்  பார்த்து மயங்கிவிடுவார், ஏன் என்றால் அவர் இந்த வாசனை திரவியத்தை பயன்படுத்தி இருப்பார்.

இந்த விளம்பரம் இங்கே சொல்லக்காரணம் இந்த விளம்பரம் மட்டுமே இங்கே எழுதமுடிவதாய் உள்ளது, மற்ற விளம்பரங்கள் காண சகிக்காதவை. இது போல அல்லது இதை விட கேவலமாக பல விளம்பரங்கள் ஆண்கள் வாசனை திரவியங்கள், சோப்பு, பவுடர் போன்றவற்றுக்கு உள்ளன.

இதில் உள்ள மையக் கருத்து என்ன? பெண்களைக் கவர வெறும் இந்த வாசனை திரவியம் போதும், பெண்களும் வெறும் இந்த கவர்ச்சியால் மயங்கிவிடுவதாகவும் காட்டப்படுகிறது. பெண்களை இதைவிட கேவலமாக சித்தரிக்க முடியாது. 

இதே ரீதியில் பெண்களை கேவலப்படுத்தும் திரைப்படங்கள் - எதற்கெடுத்தாலும் "மச்சான்!! இந்த பொண்ணுங்களே இப்படி தாண்டா " என்று வசனம் பேசும் நண்பன் கதாப்பாத்திரம். "அடிடா அவள.. வெட்ரா அவள..." மட்டம் தட்டுவது போன்ற பாடல்கள். ஏதோ இந்த உலகில் பெண்களை தவிர மோசமான ஜீவராசியே இல்லை என்கிற ரீதியில் project செய்கின்றன. எல்லா ஊடகங்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெண்களை ஒரு போக பொருளாக மட்டுமே காட்டுகின்றன.

பெண்களை போற்ற வேண்டும், பெண் சுதந்திரம் வேண்டும் என்று வாய் கிழிய பேசும் அதே வேளையில், இந்த வகையான பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஊடகங்கள் தங்களின் தார்மீக எதிர்ப்பைக் கூட காட்டுவதில்லை. பெண்கள் அமைப்புகளும் இது போன்ற ஊடகம் சார்ந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனவா என்று தெரியவில்லை.

ஒழுக்கம், அன்பு, பாசம், பெண்களை மதிக்கும் தன்மை போன்றவை சிறுவயதிலிருந்தே சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அப்படிக் கற்றுத்தராதபட்சத்தில் இந்த மாதிரியான விளம்பரங்கள், திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை கேட்டும் கண்டும் வளரும் குழந்தைகள் எப்படி பெண்களை மதிக்கவோ, ஒரு சக மனுஷியாக பார்க்கவோ செய்யும்?

நம்முடைய எதிர்ப்பைக் காட்ட இது போன்ற மலினமான விளம்பரங்கள் மூலமாக தங்கள் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்காமல் இருப்பதுதான் நம்மால் எளிமையாக செய்ய முடிவது. இதுவும் ஒரு சத்தியாகிரகம் தான்.

சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே.
                                                                            -- மகாகவி பாரதியார் 

சாட்டையடி :
இது போன்ற என் சமூக கோபங்கள் ரௌத்திரம் பழகு என்ற தலைப்பின் கீழ் பதிவிட போகின்றேன் .

Friday, March 1, 2013

எனக்குப் பிடித்த பாடல்- 2


நிறங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன வண்ணங்கள் இல்லாமல் நமக்கு சுவாரசியம் இருப்பதில்லை. திரைப்படமோ அல்லது நிழற்படமோ வண்ணங்கள் இல்லாமல்கறுப்பு வெள்ளையாக இருந்தால் நம்முடைய ஆவல் குறைகிறது. 

இயற்கையிலேயே வண்ணங்கள் கண்களுக்கு குளிர்ச்சி தருவதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதாகவும் உள்ளன.

சிலது வண்ணங்களில்லாமல் அடையாளமற்று போய்விடுகின்றன. நீல வானம், பச்சை இலை, வெண்சங்கு, மஞ்சள் போன்றவை இதற்கு உதாரணங்கள்.

ஆமா எதுக்கு இப்போ இத இங்க சொல்லிட்டு இருக்க!! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இன்று வண்ணங்களை மையமாக வைத்து வந்த பாடல் தான் எ.பி.பா வரிசையில்.

அப்பொழுது நான் 9வது படித்து கொண்டிருந்தேன் (இது ரொம்ப முக்கியம் இப்போ), இசை பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள ஆரம்பித்த சமயம். ஏ.ஆர். ரகுமான் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று மட்டும் தெரியும். இந்த பாடலை கேட்ட பின்பு தான்அவரை பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் எனக்கு ஏற்பட்டது. இந்திய இசையை வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்து சென்றவர். அந்த பாடல் இதோ :

படம் :அலைப்பாயுதே
கவிஞர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : ஹரிஹரன்

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்குபுத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடா பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோபம் எல்லா சிவப்பும் உந்தன் கோபம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழ் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம் ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே...
மழையில் முளையும் தும்பை நிறமே...
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையின் துளியும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே

எனக்கு காதல் தான் வரவில்லை, ஆனால் காதல் பாடல்கள் பிடிக்கும். அதிலும் கவித்துவமான வரிகள் உள்ள பாடலை பிடிக்காமல்போகாதா? வண்ணங்களால் எண்ணங்களைகுழைத்து கவி ஓவியம் திட்டியிருப்பார் கவி பேரரசு.

காதலை வண்ணங்களால் சொல்ல முடியுமா... காதலில் நடந்த நிகழ்வுகளைக் காதலன் சொல்கிறான்.

அவன் காதலை ஏற்று கொண்டதை குறிக்க பச்சை நிறம், அவளின் கோபத்தில் முகம் சிவந்ததை குறிக்க ரோஜாவின் ரத்த சிவப்பு, அவள் நீலக்கண்களை குறிக்க வான் மற்றும்  கடல். கருங்கூந்தலை குறிக்க கார்காலமும் காக்கையும். இப்படி நாம் மிக சாதரணமாக காண்பவற்றை கவிதையாக சொல்லியிருப்பார். இதற்கு பின் தான் குவளைபூவை தெரிந்துகொண்டேன். இத்தனை சொல்லிவிட்டு அவன் தங்கி இருக்கும் அவளின் மனதை பற்றி சொல்லாமல் இருப்பாரா தூய்மையான மழை நீர் போன்ற வெண்மனம் படைத்தவள், அப்பழுக்கில்லாத தும்பை பூ மனம் (யாராவது பார்த்திருக்கிறீர்களா?) கொண்டவள் என்று பெருமிதம்கொள்ளவைக்கிறார் காதலனை.
குவளை
குவளை
தும்பை
தும்பை




















இது காதலின் போது தான் திருமணத்திற்கு பின் என்ன நிறம் இருக்கும்?எனக்கு தெரியாது  தெரிந்தவர்கள் தங்கள் மேலான கமெண்டுகளை போடவும்.

கொத்துமல்லி:
வெண்மையும், கருமையும் வண்ணங்கள் அல்ல என்று அறிவியல் சொல்கிறது. வெள்ளை என்பது ஒளி, கருமை ஒளியற்ற வெறுமை. (கவிதைக்கு பொய் அழகுதான்!!!)

நிமிர்ந்து நில் - 1



பாரதம்
நாம் சிறு வயதிலிருந்து பள்ளியில் படித்த வரலாற்றை சற்று கூர்ந்து பார்த்தால் நமக்கு சில விஷயங்கள் புலப்படும். நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளைய அரசாங்க அதிகாரிகளை பற்றி மிகவும் பெருமையாக படிப்போம், லார்டு வில்லிங்டன், லார்டு கன்னிங். அதாவது நம்மை அடிமைபடுத்தியவர்களை பிரபு என்றும் லார்டு என்றும் அழைப்போம்.

ஏதோ அவர்கள் தான் நம்மை செம்மைபடுத்தி, நாகரிகமானவர்களாக மாற்றினார்கள் என்றும் அவர்கள் வரும் முன் நம் தேசம் காட்டு மிராண்டிகளாக இருந்தது போலவும் படிப்போம்.

நம்மிடம் பெரிய அரசர்கள் யாரவது சொல்லுங்கள்  என்றால் உடனே அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன், அக்பர் போன்றவர்கள் தான் நினைவுக்கு வருவர். ஏன் நம் நாட்டில் இது போன்ற அரசர்கள் இருந்ததில்லையா? ஒரு ராஜ ராஜ சோழனோ, வீர சிவாஜியோ, எதிரிகளையும்  மன்னித்து விட்ட ப்ரித்வி ராஜ சௌஹான் போன்றவர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்?

விடா முயற்சி என்றால் நினைவுக்கு வருவது கஜினி, ஒரு கொள்ளைகாரனை விடா முயற்சியின் சின்னமாக அங்கீகரித்திரிக்கிறோம். ஒரு கொள்ளைக்காரனை பற்றி பெருமையாக படிக்க என்ன காரணம்?

விஞ்ஞானிகளை பற்றி சொல்லவே வேண்டாம், மேற்கத்திய விஞ்ஞானிகளை தான் நமக்குத் தெரியும், நம்முடைய தொழில்நுட்ப அறிவு எப்படிப்பட்டது. நம்முடைய விஞ்ஞானிகள் யார், எப்படிப்பட்டவர்கள், அவர்கள் செய்த சாதனை என்ன? 

இப்படி பல கேள்விகள் நம்மிடம் இயற்கையாக எழ வேண்டிய கேள்விகள் கூட நம்மிடம் எழுவதில்லை, ஏன்? உண்மையிலேயே நம் நாடு காட்டுமிராண்டிகளின் தேசமாக இருந்ததா? 


இதற்கான பதில், கண்டிப்பாக இல்லை என்பதே ஆகும்!! 


நாம் இப்படி நம் நாட்டை பற்றிய பெருமைகளை அறிந்து கொள்ளாமல், மேற்கத்திய கலாச்சாரத்தையும், மேற்கத்திய அறிவியலை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பக் காரணம் நம்முடைய கல்வி முறை தான்.  இந்த கல்விமுறை நம்மிடம் வெள்ளையர்களால் திட்டமிடப்பட்ட ரீதியில் திணிக்கப்பட்டது. 


இந்த கல்விமுறையை அறிமுகப்படுத்திய "மெக்காலே" நம் நாட்டின் அப்போதைய கல்வி முறையை மாற்ற வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பித்த "Minutes of Education" ன் சாராம்சம் நாம் கீழே காணப்போவது.


"A class of persons Indian in blood and color, but English in tastes, in opinions, in morals and in intellect."


உடலளவில் பாரதீயனாகவும், மனதளவில் ஆங்கிலேயனாகவும் இருக்கக் கூடிய மக்களை உருவாக்கவே இந்த கல்விமுறையை உருவாக்கி திணித்தார்கள். நம்மை பற்றி சிறுமை படுத்தி படித்ததால் நம்மிடம் மனவுறுதி குறைந்தது, மன உறுதி குறைய குறைய நாம் வீழ்ந்தோம். இன்றும் அதே கல்வி முறைபின்பற்றப்படுவது  நம் துரதிருஷ்டம். 


இந்த  லிங்க்கில் மெக்காலே கூறிய விஷயத்தை காணலாம், அதனுடைய தமிழாக்கம் கீழே உள்ள படத்தில் காணலாம் 


மெக்காலேயின் கருத்து

மெக்காலேவால் விளைந்த விஷக்கனி 



மெக்காலே
நம் நாட்டின் பெருமையான பல விஷயங்களை நாம் மறந்து போனவற்றை நிகழ் தலைமுறைக்கு சொல்லவே இந்த சிறிய முயற்சி. நம்மை பற்றிய பெருமித உணர்வு வராமல் நம்மால் சாதிக்க முடியாது, அதை முறியடித்து நம் அனைவரையும் நிமிர்ந்து நிற்க வைக்க வேண்டும், அது நம்மால் முடியும்.



கொத்துமல்லி :

இது அறிமுக பதிவு, அடுத்த பதிவிலிருந்து தலை நிமிர்வோம். 

சும்மா ஒரு கேள்வி - சுஸ்ருதர் யார் என்று தெரியுமா? விடை அடுத்த பதிவு.