Tuesday, November 9, 2021

தெய்வச் செயல்!!

வருடம் 2013.
பனி மூடிய இமய மலை உச்சியில் ஒரு பிரும்மாண்டமான ஏரி. அழகிய மந்தாகினி நதியின் பிறப்பிடம்.

அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த ஒரு இரவில், கிட்டத்தட்ட 50 கிமீ தொலைவில் இருப்பவர்களுக்கும் கேட்கும் அளவு ராக்ஷத இடி சத்தத்துடன் அந்த ஏரி பிளந்து அந்த பிரதேசம் முழுவதையும் ஆக்ரமிக்கத் தொடங்கியது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆக்ரோசத்துடன் பாய்ந்த மந்தாகினி, வரும் வழி நெடுகிலும் உள்ள பாறைகளையும், பனிப் பாறைகளையும், மரங்களையும் புரட்டி, அடித்துக் கொண்டு கீழ் நோக்கிப் பாய்ந்தாள்.

சுமார் பத்து மணிநேரம் தொடர்த்த கடும் வெள்ளத்தில், பெரும் பாறைகளின் துணையோடு கிட்டத்தட்ட 200கிமீ சுற்றளவில் உள்ள  இடங்களை துவம்சம் செய்து விட்டாள். பல கிராமங்களும், ஆயிரக் கணக்கான மக்களும் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் செல்லப் பட்டார்கள்.

கடல் மட்டத்திலிருந்து 11400 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத் என்ற புனிதத்தலம்தான் அங்கு அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் வாழும் இடம்.

கேதார்நாத்தின் மையப் பகுதியிலுள்ள ஆலயம்தான் அதிகப் பாதிப்புக்கு உள்ளானது.. அந்த கேதார்நாத் நகரத்தின் வாழ்வாதாரங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டாலும் அங்கிருந்து வெள்ளத்தின் வேகம் சற்று குறைந்தது.

இந்த பேரிடர் நடந்த அடுத்த நாள் பாதிக்கப் பட்ட இடங்களை ஆய்வு செய்வதற்காக ஹெலிகாப்டரில் மேற்பார்வை செய்த போது, கேதார்நாத் நகரமே முழுவதும் பனியால் மூடி இருந்தது.

ஆச்சரியத்திலும் ஆச்சர்யம், ஏழாம் நூற்றாண்டில் நமது குரு ஆதி சங்கராச்சாரியரால் கட்டப் பட்ட இந்த ஆலயம் மட்டும் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாமல் அமைதியாக நின்றது.

இது எப்படி சாத்தியம்.

மாயமா, மந்திரமா என்று அனைவரையும் வியக்க வைத்தது. மூடியிருந்த பனியை விலக்கி சுத்தம் செய்து பார்த்த போது கீழிருக்கும் படத்திலுள்ள பாறை இருந்தது.


வெள்ளத்தின் போது அடித்து வரப் பட்ட இந்தப் பாறை சரியாக கேதார்நாத் ஆலயத்திற்கு பத்து அடி தூரத்தில் நிலையாக வந்து நின்று பின்னால் வந்த வெள்ளத்தின் வேகத்தைக் குறைத்து,அதன் பாதையை இரண்டாகப் பிரித்து விட்டது. 

இருந்தாலும் கோவிலுக்குள்  தண்ணீர் சென்றது. ஆனால், கோவிலுக்குள் தங்கி இருந்த 3 பூஜாரிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தார்கள்.

அந்தப் பாறை இன்னும் சில அடிகள் பின் தங்கி நின்றிருந்தாலும், அல்லது சற்று முன்னே சென்று நின்றிருந்தாலும் கோவிலையும் காப்பாற்றி இருக்க முடியாது. அந்த சிறு நகரமும் உருத் தெரியாமல் அழிந்திருக்கும்  

கடவுள் அருளால், அந்த மாயப் பாறையும், அதன் பின் தங்கிய கற்களும், பாறைகளும் ஒரு முக்கோண வடிவத்தில் சேர்ந்து, அந்த நதியின் ராக்ஷத வேகத்தைக் கட்டுப் படுத்தி, அதன் பாதையையும் இரண்டாகப் பிரித்து விட்டது. இதனால் கீழ் மட்டத்தில் இருந்த கிராமங்களும், மக்களும் பெருமளவு காப்பாற்றப் பட்டார்கள்.

அதன்பின் சமீபத்தில், மத்திய அரசு உதவியுடன் உத்தராகண்ட் அரசு அந்த சுற்று வட்டாரத்தை முழுவதுமாக சுத்தம் செய்து அந்த தெய்வீகப்  பாறையின் வழிகாட்டுதல் படியே, நதியின் ஓட்டமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதன் வீரியம் குறைக்கப் பட்டது. மக்களும் இப்போது பயம் இல்லாமல் போய் வர வசதியாக உள்ளது.

ஆதி சங்கரர் கால்நடையாக நடந்து 5000 அடி கீழே இருந்து கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் சென்று கட்டிய அந்தப் புனிதத் தலம் இந்த தெய்வீகப் பாறையால் பாதுகாக்கப் பட்டது.

இந்த பெருமை வாய்ந்த தலத்தில்தான் ஆதிசங்கரரின் சிலையை பிரதிஷ்டை செய்து நடந்த பூஜைக்கு சமீபத்தில் நம் பிரதமர் சென்று வந்தார். 

முழு பாறையும் நமக்குத் தெரியும்படி அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இது.. 

கடவுளின் அருள் நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி.

No comments:

Post a Comment