Saturday, December 18, 2021

நட்சத்திர பிறந்த நாள்

பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் கவனத்திற்கு!

நீங்கள் ஏன் இன்னொருவர் பிறந்த நாளை உங்கள் பிறந்த நாளாகக் கருதி கொண்டாட வேண்டும்?!!

ஒவ்வொருவருக்கும் தாம் பிறந்த நாளென்பது மிக முக்கியமான மறக்கவியலாத ஒரு நாளாகும். ஒவ்வொரு வருடமும் அந்த நாள் கோவிலுக்கு சென்று வருவது இயலாதோருக்கு அன்னதானம் வழங்குவது ஆடைகள் தானம் வழங்குவது மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட நல்ல நிகழ்வுகளில் ஈடுபட்டு அதை மகிழ்வானதாக்கிக் கொள்வதும் இயற்கை தான்.

நம் கலாச்சாரத்தில்நம் பிறந்த நாளை (தேதியை) விட நாம் பிறந்த பொழுது நடப்பிலிருந்த நட்சத்திரம்தான் மிக முக்கியமானதாகும்.

ஆம் ஒருவர் 09.4.2021 நாளில் பிறக்கிறாரென்றால்,‌ இந்த தேதியை விட‌ இந்த நாளில் நடப்பிலிருக்கும் நட்சத்திரமான (மாசிமாதம் தேய்பிறை சதய நட்சத்திரம்) என்பதுதான் மிக முக்கியமாகும்.

அவர் அடுத்த ஆண்டு தன் பிறந்த நாளை கொண்டாட நினைத்தால் அந்த ஆண்டில் மாசி மாதம், சதய நட்சத்திரம் வரும் நாளில் தன் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் அது தான் சரியாக இருக்கும்‌ அதை விடுத்து 09.04.2022 அன்று தேதியை முதன்மைப்படுத்தி தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் அன்று‌ அவர் பிறந்த நட்சத்திரம் நிச்சயமாக இருக்காது அது இன்னொருவர் பிறந்த நாளை நம்முடைய பிறந்த நாளாக கருதி கொண்டாடுவது போலாகிவிடும்.

இன்னும் விளக்கமாக பார்ப்போம்

உதாரணமாக கிறிஸ்மஸ் பண்டிகை எல்லா ஆண்டுமே டிசம்பர் 25ஆம் நாள் தான் வரும்

ஆனால் நமது பண்டிகைகளான தீபாவளி, திருகார்த்திகை தீபம் மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆவணி அவிட்டம், வைகாசி விசாகம், தைப்பூசம் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட எந்த விசேஷ நாட்களுமே வருடா வருடம் குறிப்பிட்ட ஒரே தேதியில் வராது அந்தந்த தமிழ் மாதங்களின் நட்சத்திர கணக்கீட்டின்படியே மாறி மாறி வரும்‌ அப்படியிருக்க நாமும் நம்முடைய பிறந்த நாளையும் மேற்கத்திய கலாச்சாரத்தின் படி வருடாவருடம் குறிப்பிட்ட தேதியிலேயே கொண்டாடுவதென்பது அறிவார்ந்த செயலாக இருக்காதல்லவா…!?!!

எனவே இனியேனும் இந்த விபரங்களை வீட்டில் உள்ளோருக்கும் நன்கு புரியும்படி விளக்கி அடுத்து வரும் ஆண்டில் நாம் பிறந்த மாதத்தில் வரும்…‌ நமது பிறந்த நட்சத்திரத்தை நம் பிறந்தநாளாக அனுஷ்டிப்போம்.

தவிர நம்முடைய கலாச்சாரத்தில் நல்ல நாட்களில் சுப நிகழ்வுகளில் விளக்கை ஏற்றிவைத்து துவங்குவதும் வழிபடுவதுமே வழக்கம் அவ்வாறிருக்க சுப நாளில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அதையும் அபசகுனமாக வாயால் ஊதி அனைத்து உணவுப்பொருளை கத்தியால் வெட்டி மற்றவர்கள் வாயில் திணிப்பது இப்படி அனைத்துமே மிக தவறான நடவடிக்கைகளாகும்

எனவே அடுத்த முறை உங்களது பிறந்த நாளை. அதற்குரிய தமிழ் மாத நட்சத்திரத்தில் முன்னதாக பார்த்து அறிந்து உங்கள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி இறை பதிகங்கள், மந்திரங்களை உச்சரித்து கோவிலுக்குச் சென்று உங்கள் பெயரில் நட்சத்திரத்தோடு அர்ச்சனை செய்து,. பூசனை செய்து முறையாக வழிபட்டு பலனடைய வேண்டும்.

இந்த நல்ல தகவலை 10 ஹிந்துச் சொந்தங்களுக்கு பகிர்வது கூட ஒரு நல்ல புண்ணிய காரியம்தான்.

No comments:

Post a Comment