Friday, December 24, 2021

புதிய தேர்தல் சட்டம் - ஒரு பார்வை

தேர்தல் சட்டத் திருத்த மசோதா, 2021:

1. ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க, வழிவகை செய்யப் பட்டு உள்ளது.

2. 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள், தங்களது பெயர்களை பதிவு செய்ய, ஜனவரி 1 என ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப் பட்டு வந்தது. இனி அது, வருடத்திற்கு நான்கு முறையாக ஜனவரி – 1, ஏப்ரல் – 1, ஜூலை- 1, அக்டோபர் – 1, என மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.

3. பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள், தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று வாக்கு அளிக்க முடியாத சூழ்நிலையில், அவரின் வாக்கை அவரது மனைவி செலுத்த முடியும். ஆனால், பணியில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு பதிலாக, அவரது வாக்கை, அவரின் கணவர் செலுத்த, சட்டத்தில் இடம் இல்லாமல் இருந்தது. இத்தகைய நடைமுறை மாற்றப் பட்டு, இனி கணவர்களுக்கும், அந்த உரிமை அளிக்கப் பட்டு உள்ளது.

4. ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு வசதியாக, எந்த இடத்தையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய அதிகாரத்தை, தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இத்தகைய நான்கு தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள், தற்போது நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப் பட்டு உள்ளது.

மேலும் படிக்க : https://mediyaan.com/electoral-reform-bill-to-link-aadhaar-voter-id/

No comments:

Post a Comment