![]() |
| பாரதம் |
ஏதோ அவர்கள் தான் நம்மை செம்மைபடுத்தி, நாகரிகமானவர்களாக மாற்றினார்கள் என்றும் அவர்கள் வரும் முன் நம் தேசம் காட்டு மிராண்டிகளாக இருந்தது போலவும் படிப்போம்.
நம்மிடம் பெரிய அரசர்கள் யாரவது சொல்லுங்கள் என்றால் உடனே அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன், அக்பர் போன்றவர்கள் தான் நினைவுக்கு வருவர். ஏன் நம் நாட்டில் இது போன்ற அரசர்கள் இருந்ததில்லையா? ஒரு ராஜ ராஜ சோழனோ, வீர சிவாஜியோ, எதிரிகளையும் மன்னித்து விட்ட ப்ரித்வி ராஜ சௌஹான் போன்றவர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்?
விடா முயற்சி என்றால் நினைவுக்கு வருவது கஜினி, ஒரு கொள்ளைகாரனை விடா முயற்சியின் சின்னமாக அங்கீகரித்திரிக்கிறோம். ஒரு கொள்ளைக்காரனை பற்றி பெருமையாக படிக்க என்ன காரணம்?

விஞ்ஞானிகளை பற்றி சொல்லவே வேண்டாம், மேற்கத்திய விஞ்ஞானிகளை தான் நமக்குத் தெரியும், நம்முடைய தொழில்நுட்ப அறிவு எப்படிப்பட்டது. நம்முடைய விஞ்ஞானிகள் யார், எப்படிப்பட்டவர்கள், அவர்கள் செய்த சாதனை என்ன?
இப்படி பல கேள்விகள் நம்மிடம் இயற்கையாக எழ வேண்டிய கேள்விகள் கூட நம்மிடம் எழுவதில்லை, ஏன்? உண்மையிலேயே நம் நாடு காட்டுமிராண்டிகளின் தேசமாக இருந்ததா?
இதற்கான பதில், கண்டிப்பாக இல்லை என்பதே ஆகும்!!
நாம் இப்படி நம் நாட்டை பற்றிய பெருமைகளை அறிந்து கொள்ளாமல், மேற்கத்திய கலாச்சாரத்தையும், மேற்கத்திய அறிவியலை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பக் காரணம் நம்முடைய கல்வி முறை தான். இந்த கல்விமுறை நம்மிடம் வெள்ளையர்களால் திட்டமிடப்பட்ட ரீதியில் திணிக்கப்பட்டது.
இந்த கல்விமுறையை அறிமுகப்படுத்திய "மெக்காலே" நம் நாட்டின் அப்போதைய கல்வி முறையை மாற்ற வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பித்த "Minutes of Education" ன் சாராம்சம் நாம் கீழே காணப்போவது.
"A class of persons Indian in blood and color, but English in tastes, in opinions, in morals and in intellect."
உடலளவில் பாரதீயனாகவும், மனதளவில் ஆங்கிலேயனாகவும் இருக்கக் கூடிய மக்களை உருவாக்கவே இந்த கல்விமுறையை உருவாக்கி திணித்தார்கள். நம்மை பற்றி சிறுமை படுத்தி படித்ததால் நம்மிடம் மனவுறுதி குறைந்தது, மன உறுதி குறைய குறைய நாம் வீழ்ந்தோம். இன்றும் அதே கல்வி முறைபின்பற்றப்படுவது நம் துரதிருஷ்டம்.
இந்த லிங்க்கில் மெக்காலே கூறிய விஷயத்தை காணலாம், அதனுடைய தமிழாக்கம் கீழே உள்ள படத்தில் காணலாம்
நம் நாட்டின் பெருமையான பல விஷயங்களை நாம் மறந்து போனவற்றை நிகழ் தலைமுறைக்கு சொல்லவே இந்த சிறிய முயற்சி. நம்மை பற்றிய பெருமித உணர்வு வராமல் நம்மால் சாதிக்க முடியாது, அதை முறியடித்து நம் அனைவரையும் நிமிர்ந்து நிற்க வைக்க வேண்டும், அது நம்மால் முடியும்.
கொத்துமல்லி :
இது அறிமுக பதிவு, அடுத்த பதிவிலிருந்து தலை நிமிர்வோம்.
சும்மா ஒரு கேள்வி - சுஸ்ருதர் யார் என்று தெரியுமா? விடை அடுத்த பதிவு.
இப்படி பல கேள்விகள் நம்மிடம் இயற்கையாக எழ வேண்டிய கேள்விகள் கூட நம்மிடம் எழுவதில்லை, ஏன்? உண்மையிலேயே நம் நாடு காட்டுமிராண்டிகளின் தேசமாக இருந்ததா?
இதற்கான பதில், கண்டிப்பாக இல்லை என்பதே ஆகும்!!
நாம் இப்படி நம் நாட்டை பற்றிய பெருமைகளை அறிந்து கொள்ளாமல், மேற்கத்திய கலாச்சாரத்தையும், மேற்கத்திய அறிவியலை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பக் காரணம் நம்முடைய கல்வி முறை தான். இந்த கல்விமுறை நம்மிடம் வெள்ளையர்களால் திட்டமிடப்பட்ட ரீதியில் திணிக்கப்பட்டது.
இந்த கல்விமுறையை அறிமுகப்படுத்திய "மெக்காலே" நம் நாட்டின் அப்போதைய கல்வி முறையை மாற்ற வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்பித்த "Minutes of Education" ன் சாராம்சம் நாம் கீழே காணப்போவது.
"A class of persons Indian in blood and color, but English in tastes, in opinions, in morals and in intellect."
உடலளவில் பாரதீயனாகவும், மனதளவில் ஆங்கிலேயனாகவும் இருக்கக் கூடிய மக்களை உருவாக்கவே இந்த கல்விமுறையை உருவாக்கி திணித்தார்கள். நம்மை பற்றி சிறுமை படுத்தி படித்ததால் நம்மிடம் மனவுறுதி குறைந்தது, மன உறுதி குறைய குறைய நாம் வீழ்ந்தோம். இன்றும் அதே கல்வி முறைபின்பற்றப்படுவது நம் துரதிருஷ்டம்.
இந்த லிங்க்கில் மெக்காலே கூறிய விஷயத்தை காணலாம், அதனுடைய தமிழாக்கம் கீழே உள்ள படத்தில் காணலாம்
![]() |
| மெக்காலேயின் கருத்து |
![]() |
| மெக்காலேவால் விளைந்த விஷக்கனி |
![]() |
| மெக்காலே |
கொத்துமல்லி :
இது அறிமுக பதிவு, அடுத்த பதிவிலிருந்து தலை நிமிர்வோம்.
சும்மா ஒரு கேள்வி - சுஸ்ருதர் யார் என்று தெரியுமா? விடை அடுத்த பதிவு.

No comments:
Post a Comment